ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 77 நாட்களில், விதிகளை மீறிய 6, 04,769 பேரை போலீசார் கைது செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.. மொத்தம் 4, 57,641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடமிருந்து இதுவரை மொத்தம் 11 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 154 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.