Categories
Uncategorized

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர்.

Image result for தமிழ்நாடு அமைச்சரவை

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. காலை 11 மணிக்கு கூடவிருக்கும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து மட்டுமில்லாமல் சமீபத்தில் அமைச்சர்களது வெளிநாட்டு பயணத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Categories

Tech |