ஆப்கானில் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய நிலையில், தலிபான் அமைப்பு சோதனையை தொடங்கியுள்ளது
ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று நிற்கின்றனர்..
இதையடுத்து அங்கு விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
இந்நிலையில் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய நிலையில், தலிபான் அமைப்பு சோதனையை தொடங்கியுள்ளது.. ஆப்கான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்கள் தற்காப்புக்காக மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.. மேலும் அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடுகின்றனர்..