இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து ரசித்தார்
இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், அங்குலமாக பார்த்து பார்த்து ரசித்தனர்.மேலும் அவர்களுக்கு தாஜ்மஹாலின் மேன்மையை பற்றியும், முகலாய கட்டிடக்கலையையும் சுற்றுலா வழிகாட்டிகள் எடுத்துரைத்தனர்.
உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை டிரம்ப் தம்பதியினர் ஒவ்வொரு கோணத்திலும் ரசித்தனர். மேலும் பல இடங்களில் நின்றுகொண்டு மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதேநேரம் டிரம்பின் மகள் இவான்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மஹாலை சுற்றி பார்த்து அழகை ரசித்துக்கொண்டே புன்னகையுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
அதிபர் டிரம்ப் தாஜ்மஹாலை பார்த்து வியந்து போய் அங்கே வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில், தாஜ்மஹாலை புகழ்ந்து எழுதினார். அதில், தாஜ்மஹால் எங்களுக்கு பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாசாரத்தின் ஒரு வாழும் உதாரணம் இதுவாகும்’ எனறு குறிப்பிட்டார். அதிபர் டிரம்ப் மற்றும் குடும்பத்தினர் சுமார் ஒரு மணி நேரம் தாஜ்மஹாலில் செலவிட்டனர். அதைத்தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
The Trumps message in the visitor book at #TajMahal #TrumpInIndia pic.twitter.com/P0lYQGNwLV
— barkha dutt (@BDUTT) February 24, 2020
U.S. President Donald Trump and his wife Melania Trump's visit to #TajMahal #TrumpInIndia #TrumpIndiaVisit pic.twitter.com/DDMujuWdV1
— BA Raju's Team (@baraju_SuperHit) February 24, 2020
#IvankaTrump (@IvankaTrump) puts #Instagram on fire with 'awe inspiring' #TajMahal pics. "Taj Mahal. The beauty of the Taj Mahal is awe inspiring!" she posted on her Instagram page.
Photo: Ivanka Trump pic.twitter.com/pmTywmrV7Q
— IANS (@ians_india) February 24, 2020