சுவிட்சர்லாந்து அரசு கொரோனா ஊரடங்கை தளர்த்துவது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வருகின்ற சனிக்கிழமை முதல் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் 10,000 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டதற்கான சான்றிதழை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
அதேசமயம் முககவசம் அணிவது கொரோனா சான்றிதழை வழங்கும் மக்களுக்கு அவசியம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கை வசதிகள் இருந்தால் கொரோனா சான்றிதழ் தேவைப்படாத நிகழ்வுகளில் ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருக்கை வசதி இல்லை என்றால் வெளிப்புறம் நடக்கும் நிகழ்வுகளில் 500 பேரும், உட்புறம் நடக்கும் நிகழ்வுகளில் 250 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.