சூடான் ராணுவம் அப்தல்லா ஹம்டோக்-ஐ மீண்டும் பிரதமராக ஏற்றுகொண்டுள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடானில் அப்தல்லா ஹம்டோக் என்பவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து இடைக்கால அரசை கவிழ்த்து விட்டு சூடான் ராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்தது. அதன் பிறகு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதோடு பிரதமர் பதவியிலிருந்த அப்தல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் கிளர்ச்சிக் குழு, அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் குழு மற்றும் ராணுவம் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூடான் ராணுவம் அப்தல்லா ஹம்டோக்-ஐ மீண்டும் பிரதமராக ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் சூடானில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பமும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.