கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தென் இந்திய மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 305 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதமாக காந்தாரா அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரிஷப் செட்டியை வீட்டிற்கு வரவழைத்து நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன் பிறகு பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத்தும் காந்தாரா திரைப்படத்தை மிகவும் பாராட்டி இருந்தார். இதனையடுத்து அண்மையில் பெங்களூருவில் காந்தாரா திரைப்படத்தை பார்த்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் படத்தை புகழ்ந்து பேச, மத்திய மந்திரி பியூஸ் கோயல் அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது காந்தாரா படத்தை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
அதாவது 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தற்போது 305 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்பதற்கு காந்தாரா திரைப்படம் நல்ல உதாரணம். இந்த படத்தை அனைத்து தொழில் முதலீட்டாளர்களும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி கூறினார். இந்நிலையில் நடிகர் ரிஷப் செட்டி தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, காந்தாரா படம் வெற்றி பெற்றதால் எனக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து பல இயக்குனர்கள் அழைப்பு விடுகின்றனர். எனக்கு நடிகர் அமிதாப்பச்சனை மிகவும் பிடிக்கும். இதேபோன்று ஷாகித் கபூர் மற்றும் சல்மான் பாய் போன்றோரையும் நேசிக்கிறேன். மேலும் தற்போது கன்னட சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.