திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா, நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில் தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் மாணவி மோனிகா உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்ததுள்ளார். அதை கண்ட மோனிகாவின் பெற்றோர் கதறி அழுது புலம்பினர். இந்த துயரத்தை காண்போர் கண்களில் கண்ணீர் கசிந்தது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றினர். உடலில் காயங்கள் இருப்பதால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக இது மாதிரியான சம்பவங்கள் குறைந்த நிலையில் நேற்று மதுக்கடை திறந்ததால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது …அந்த வகையில் எதுவும் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த மோனிகாவிற்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.