ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்க செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் ஒரு உயிரிழந்துள்ளார். அதாவது ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினருக்கு குருபிரசாத் என்ற ஒரு மகன் உள்ளான். அவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
புகைப்படங்களின் மோகம் யாரை தான் விட்டது. அதற்கு ஏற்றது போல் கிணற்றில் குதித்து நீந்தும்போது தன்னை வீடியோ எடுக்கும் படி தனது உறவினரான சிறுவனிடம் சொல்லிவிட்டு கிணற்றில் குதித்துள்ளார். சிறிது நேரம் கிணற்றில் நீச்சல் அடித்தவாறு நீந்திய நிலையில், அந்தக் கிணற்றினுள் தண்ணீர் செல்லும் இரும்புக் குழாயை பிடித்துளான். அந்தக் குழாயில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் குருபிரசாத் மின்சாரம் தாக்கி கிணற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.