Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் கதை…. என்னுடைய கதை -இன்னும் திருந்தாத கதாசிரியர்…!!

விஜய் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என்று கே.ரங்கதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கதாசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் கே.ரங்கதாஸ். இவர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தான் எழுதிய கதையான  “நினைக்கும் இடத்தில் நான்” என்ற படத்தில் வரும் காட்சி போல இருக்கிறது. இது குறித்து தான் சட்டப் போராட்டம் நடத்துவதாக கூறி உள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் மாஸ்டர் படத்தின் கதை என்ன? உங்கள் படம் என்ன கதை? என்று செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளை நிலைகுலைந்து போன அவர் ஒருவேளை தனது கதை திருட்டு போகலாம் என்று சந்தேகிப்பதாகவும், தன்னுடைய கதை மாஸ்டர் படத்தின் கதையா? என்பது தனக்கு தெரியாது என்றும் கே.ரங்கதாஸ் கூறி சமாளித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி நீதி மன்றத்தில் பல வருடங்கள் சட்டப் போராட்டம் நடத்தி தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |