Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசே கஷ்டத்துல இருக்கு…! ”புதுசா யாரையும் எடுக்காதீங்க” அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது.

கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது  என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்க கூடாது. கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |