Categories
உலக செய்திகள்

காதில்   கூடு கட்டிய சிலந்தி…!!மருத்துவர்கள்அதிர்ச்சி….!!!

மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில்   கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த  20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது.

Image result for சிலந்தி

இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம்,  ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் ஊற்றி  அதனை  அகற்றினர்.

 

Categories

Tech |