குடிக்க பணம் தராததால் சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே அவர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இதையடுத்து குடிக்க பணம் தேவைப்பட்ட போதெல்லாம் தனது தந்தையின் பென்ஷன் பணத்தை கேட்டு தொந்தரவு செய்வார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அதேபோல் தொந்தரவு செய்த பொழுது தந்தை பணம் தர மறுத்து விட்டு தூங்க சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் போதையில் செய்வதறியாமல் அம்மிக்கல்லை தந்தை தலையில் போட்டு கொலை செய்துவிட்டார். இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தங்கவேல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சசிகுமாரை கைது செய்து தங்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான சசிகுமாருக்கு மனைவி மகன் மகள் என்ற குடும்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல்துறையினர் இந்த கொலை குறித்து சசிகுமாரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.