அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து பார்த்தபோது,
8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு லாராவின் கழுத்தை சுற்றிய நிலையில் அவர் இறந்திருந்தார். போதையில் மயங்கி இருந்த நிலையில் அவர் கீழே விழுந்த பிறகு பாம்பு கழுத்தை இறுக்கி இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் லாராவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தும் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.