Categories
உலக செய்திகள்

அடடே! “சிரிக்கும் சூரியன்”…. நாசா வெளியிட்ட அபூர்வ புகைப்படம்….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

தீபாவளி முடிந்த மறுநாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில் தற்போது நாசா சூரியன் சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தங்களுடைய அதிகார பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவதால் சில சமயங்களில் கரும்புள்ளி தோன்றும்.

இந்த கரும்புள்ளிகள் ஒன்று சேர்ந்து சிரிப்பது போன்ற ஒரு முகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சிரித்த முகத்தை நாசா படம்பிடித்துள்ளது. உலகின் ஆதி கடவுளாம் சூரியன் பல கோடி வருடங்களுக்கு பிறகும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். மேலும் நாசா வெளியிட்ட புகைப்படம் ஆனது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |