பின்லாந்தில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யபோவதாக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொற்றின் பரவலும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் மீண்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரகால நிலை அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவருடம் பிறந்ததிலிருந்து பின்லாந்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. புதுவகை வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துக்கொண்டிருந்தது. இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் மருத்துவமனைகளில் பெரும் சிக்கல் ஏற்படும். ஆகையால், அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனைத் திரும்பப் பெறும் வரை பொதுமக்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.