Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற சிறுவன்… கடித்துகுதறிய வெறிநாய்… பதறவைக்கும் காட்சி..!!

ராசிபுரம் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெருவில் இன்று காலை சிறுவன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த நாய் ஒன்று அச்சிறுவனை கண்டதும் திடீரென கடித்துக் குதறியது. நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அச்சிறுவன் அலறினான்.. உடனே சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் கையில் துடைப்பத்துடன் சத்தமிட்டு நாயை விரட்டினார். வலி தாங்க  துடித்த சிறுவன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நாய் கடித்ததில் சிறுவனின் கை, தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுவனை நாய் கடித்த சம்பவம் அருகிலிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராசிபுரம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன.

இங்குள்ள சில தெரு நாய்களுக்கு வெறிபிடித்துள்ளதாகவும் கடந்த 3 மாதங்களாகவே நாய்கள் கடித்ததில், 10க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களால் இரவு நேரங்களில் வருபவர்கள் மிகுந்த அச்சத்துடன் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெருநாய்களை பிடிக்க பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

Categories

Tech |