Categories
தேசிய செய்திகள்

‘பிச்சை எடுக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி’ – ஒடிசாவில் ஒரு பகீர் சம்பவம்!

பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், பிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்‌ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்‌ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது.

BE Graduate found as beggar

சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், பிச்சைக்காரர் ஆங்கிலத்தில் புகார் கடிதத்தை நிரப்ப, அருகிலிருந்தவர்கள் வியந்துள்ளனர்.

தான் புபனேஷ்வரின் நிலாத்ரி விஹார் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பி-இன் மகன் என்றும்; தனது பெயர் கிரிஜா சங்கர் மிஸ்ரா என்றும் குறிப்பிட்டார். மேலும், எல்லோரையும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே எடுத்துச் செல்லும் வகையில், அவர் பி.டெக்., பட்டதாரி என்பதும் அப்போது தெரிய வந்தது. பி.டெக்., பட்டதாரி எப்படி பிச்சைக்காரராக மாறினார் என்று தெரியாவிட்டாலும் இந்தச் சண்டை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |