Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

99%…. “NO CORONA” கொரோனா தடுப்பு பணியில்….. அயராது உழைக்கும் காவல்துறை…..!!

யாருக்கும் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 72 ஆக உள்ளது.

ஆனால் தற்போது மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை எடுத்து வருகின்றார். மேலும் தொற்று யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு அனைத்து வாகனங்களும் மாவட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

இதே போன்று பிற மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருபவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற பொது மக்களும் ஆதரவளித்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |