பாகிஸ்தானில் ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு ஊர்வலமாக வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணங்களின் போது மணமக்களை குதிரை, ஆடம்பர கார் உள்ளிட்டவற்றின் மீது ஏற்றி ஊர்வலம் வருவர். ஆனால் அதற்கு மாறாக பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்று மிகவும் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. அதாவது அந்த திருமண விழாவில் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி எக்ஸ்கவேடரில் நின்றபடி மணமக்கள் இருவரும் பயணித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மணமக்கள் இருவரும் அந்த ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்து ஊர்வலமாக சென்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.