சவுதி அரேபியா அரசு இந்தியாவிற்கு பயணம் செய்துவிட்டு திரும்பி வருபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான பயணம் மேற்கொள்வோர் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து சென்றால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான விவரம் மற்றும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் சவுதி அரேபிய அரசு “ரெட் லிஸ்ட்” எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை வகைப்படுத்தியுள்ளது. அதில் பிரேசில், ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபிய அரசு “ரெட் லிஸ்ட்” பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் பயணிக்க தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு மக்கள் யாரேனும் சென்று திரும்பி வந்தால் அவர்களுக்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.