Categories
அரசியல்

ஒரே ஆளு…! சென்னையில் 1ஓட்டு… பெரம்பலூரில் 1ஓட்டு… திருச்சியில் 1ஓட்டு.. ADMK சொன்ன முக்கிய தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்களிக்க 11 டாக்குமெண்ட் குறித்து எலக்சன் கமிஷனுக்கு சொல்லி இருக்கிறார்கள், அதையெல்லாம் வைத்து வாக்காளர் பதிவு செய்யலாம் என்ற அளவிற்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே அந்த கருத்துக்களை எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பியூரிஃபிகேஷன் ஆஃப் எலக்ட்ரோ ரூல் 100 சதவீதம் அளவிற்கு ஒரு ஓட்டு ஒருவருக்கு. அதனால் அந்த அடிப்படையில் எங்க இருந்தாலும் சரி ஒரு ஓட்டு தான், அவர் திருச்சியில் ஒரு ஓட்டை போட்டுவிட்டு,

சென்னையில் ஒரு ஓட்டு போட்டுட்டு,  பெரம்பலூரில் ஒரு ஓட்டு போடுறது மாதிரியான தில்லு முள்ளுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற வகையில் எங்களை கருத்துக்களை நாங்கள் முன் வைத்தோம்.அதை கண்டிப்பாக அதற்கேற்ற முறையில் ஆமோதிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இது போன்ற குளறுபடிகள் இறந்து போனவர்கள், இடம் மாற்றியவர்கள் , புகைப்படம் மாற்றுவது, அதன் பிறகு வாக்காளர் அடையாள அட்டையை பொதுவாகவே வந்து ஒருத்தருக்கு ஆறு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, இதையெல்லாம் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலமும்,

இல்லை என்று சொன்னால் 11 வகையான டாக்குமெண்ட் எலக்சன் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. அதை இணைப்பதன் மூலம் தான் இது போன்ற குளறுபடிகள் இல்லாமல் தவிர்க்கப்படும். முழுமையான அளவிற்கு ஒரு தெளிவுபடுத்தி 100 சதவீதம் நீக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் எலக்சன் கமிஷன் வந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வேலையை செய்து 100% அளவிற்கு எந்த வித தவறில்லாத வாக்காளர் பட்டியலை அளித்திட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே சொல்லியிருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |