லண்டனில் கடை ஊழியர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையன் குறித்த பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11 மணி அளவில் Shadwell பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையன் கடை ஊழியரிடம் கருப்பு பை ஒன்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து கடை ஊழியரும் அந்த நபரிடம் என்ன வேண்டும் என்று தெளிவாக கேட்டுள்ளார். இந்நிலையில் அந்த கொள்ளையன் கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கடை ஊழியர் துப்பாக்கிதாரி மீது சாக்லெட் பார்களை வீசியதோடு அலறல் சத்தத்தையும் எழுப்பியுள்ளார்.
https://youtu.be/5FcBHntvkiA
இந்த சம்பவத்தில் சற்று தடுமாறிய அந்தக் கொள்ளையன் கடையில் இருந்து தப்புவதற்கு முன்பாக துப்பாக்கியை கொண்டு கடைக்காரரின் தலையில் மோசமாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தப்பி ஓடிய கொள்ளையனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தக் கொள்ளையன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த கடைகாரர் தலையில் காயம்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.