அஜித்தின் உழைப்பிற்கு கட்டாயம் பலன் கிட்டும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தமிழ் சினிமாவின் சரித்திர வெற்றியை கட்டாயம் இப்படம் காணும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
மேலும் அஜித் இப்படத்தில் பைக் சேசிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து செய்துள்ளார். அவரது உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிட்டும் என்று கூறியுள்ளார். ஆகையால் அஜித்தின் வலிமை படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.