Categories
அரசியல் மாநில செய்திகள்

சரியான டைம் வந்துட்டு…! தமிழர்களே வீரியமாக தயாராகுங்க…. ஹிந்திக்கு எதிராக வைரமுத்து அறைகூவல் ..!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று, சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களே…  அது வெறும் பரிந்துரை தான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. மசோதாவை நோக்கி நகர்த்தப்படுகின்ற பரிந்துரைகள் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம்.

இதற்கு முன்னால்… இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது,  இந்து திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தி திணிப்பு எல்லாம் கொசு கடித்ததை போல, அதை நசுக்குவது கண்ணுக்கு தெரியும். மூட்டை பூச்சி கடித்ததை போல, அது நசுக்குவது கண்ணுக்கு தெரியும். இப்போது திணிக்கப்படுகின்ற இந்தி மொழி,  வேறு வடிவம் கொண்டிருக்கிறது.

ஒரு ஆட்டுக்கு பூச்சூட்டி விட்டு, அந்த ஆட்டுக்கு பொட்டு வைத்து, அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது போல, அது நின்று கொண்டிருக்கிறது. கத்தி தயாராக இருக்கிறது. தமிழர்களே… விழித்துக் கொள்ளுங்கள். 1938 இல் நேர்ந்த அல்லது தமிழ்நாட்டில் எழுந்த அந்த உணர்ச்சியை விட, 1965 நேர்ந்த அல்லது எழுந்த எழுச்சியை விட, 2022-ல் தமிழர்கள் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்குரிய காலம் இப்போது வந்திருக்கிறதாக நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |