Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை காக்கும் பொறுப்பு…. இவரால் தான் கிடைத்தது… பெரியப்பா மீது பாசமழை பொழிந்த C.M ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க…  அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது,  2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க.

கோபாலபுரம் அந்த தெருவில் நடந்தே வந்தனர். கத்திரிக்கோல் எடுத்து தலைவருக்கு கிட்ட கொடுக்கிறேன்.  தலைவர் உடனே நான் திறக்க மாட்டேன். அவரிடத்தில் கொடுத்து திறக்க சொல் என்று பேராசிரியர் கையில் கொடுத்தார். ஆக முதன் முதலில் என்னுடைய அலுவலகத்தை திறந்து வைத்தது என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான்.

அவர் கொடுத்த உற்சாகத்தின் அடிப்படையில் தான்..  ஊக்கத்தின் அடிப்படையில் தான்…  இன்று அண்ணா அறிவாலையத்தை கட்டி காக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பை ஏற்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. ஏன் கோட்டை காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் எனக்கு கிடைச்சிருக்குனா…  இந்த தமிழகத்தை காட்டக்கூடிய அந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்குனா… இளைஞர் அணிக்கு முதல் முதலில் அன்பக்கம் எங்களுக்கு எப்படி கிடைச்சது ? அதற்கும் காரணம் பேராசிரியர் தான் என பெருமை கொண்டார்.

Categories

Tech |