Categories
தேசிய செய்திகள்

“பயிற்றுமொழியை தேர்வு செய்வது அந்தந்த மாநிலத்தின் உரிமை”… ரமேஷ் பொக்ரியால் தமிழில் டுவீட்…!!

புதிய கல்விக் கொள்கையில் பயிற்றுமொழியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதை மத்திய அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கை செயல்படுவதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய கல்வி கொள்கை பற்றி ஆராயவும், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராயவும் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதிய கல்வி கொள்கை குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புதிய கல்விகொள்கை பற்றிய கோரிக்கை மனுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக டி.ஆர்.பாலு என்னிடம் சமர்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை நான் விளக்கினேன். மேலும் டி.ஆர்.பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தேர்வு செய்து என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் பற்றியும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்” என அவர் பதிவிட்டிருந்தார்.

 

Categories

Tech |