Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிரான தீர்மானம்… பெரும்பான்மையானோர் வாக்களிப்பு… ஆடிப்போன டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கும் விழா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஜோ பைடனின் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், அவரது ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.வன்முறையாக வெடித்த இப்போராட்டத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிர் இருந்ததால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் ட்ரம்பை அரசியலமைப்புச் சட்டம் 25ன் கீழ் அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், அதிபர் பதவியிலிருந்து ட்ரம்பை நீக்கும் தீர்மானத்தின் வாக்கெடுப்பு விடப்பட்டது. அப்போது குடியரசு கட்சியினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ட்ரம்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதனை தொடர்ந்து செனட் சபையில் வாக்கெடுப்பு விடப்பட்டது. ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் செனட்சபை கூட மிக குறைவான வாய்ப்புகளே உள்ளது.ஒரு அதிபருக்கு எதிராக இரண்டு முறை பதவி நீக்கம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |