நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தின் மூலம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது.
ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சைப் அலிகானும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு திரைப்படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சுதீப் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.