Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில்… தனிமைப்படுத்துதல் 7 நாட்கள் கிடையாது… அப்போ எத்தனை நாட்கள் தெரியுமா?

வேறு வேறாக இருந்த தனிமைப்படுத்தும் காலத்தை அனைவருக்கும் ஒரே அளவாக மாற்றி பிரிட்டன் அரசு அறிவிக்க உள்ளது

பிரிட்டனில் தற்போது இருக்கும் விதிகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டியிருந்தது.இந்நிலையில் சுகாதார செயலர் ஹான்காக் இந்த விதிகளில் சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறார்.

இதுவரை இருந்த விதிகளினால் சிலர் 7 நாட்கள் சிலர் 14 நாட்கள் என குழப்பங்கள் இருந்து வந்தது. இதனை சரிசெய்யும் விதமாக அனைவரும் ஒரே விதி முறையை பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் என அனைவரும் தங்களை இனி 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த புதிய விதிமுறையாக இருக்கும் என எண்ணப்படுகிறது.

7 நாட்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கான தனிமை காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனிருந்தவர்கள் 10 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டால் போதும் என குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இனி யார் தனிமைப் படுத்தப் பட்டாலும் பத்து நாட்கள் தான் என முடிவு எடுக்கப்பட உள்ளது.

Categories

Tech |