Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் விகிதம் 27.52% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை..!

நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ” கொரோனா போன்ற தொற்றுநோய்கள் பொதுவாக, சமூக இயக்கம் அனுமதிக்கப்படும் போது, மக்கள் சமூக இடைவெளியை மதிக்கவில்லை என்றால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் நோய் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |