பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார்.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல சாலையோர வியாபாரிகள், சிறிய வியாபாரிகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார். சுயதொழில் செய்து வருபவர்களுக்கும் இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், பிரதமரின் தன்னிறைவு இந்தியா என்கிற திட்டத்தின் அடிப்படையில் இன்றைய அறிவிப்புகள் இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.