Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING : ஒரே நாளில் சடாரென்று சரிந்த தங்கம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

சென்னையில் தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து  தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் மேலே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ 31,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 78 குறைந்து ரூ 3,986 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.60 காசுகள் குறைந்து  ரூ 47.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Categories

Tech |