பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இன்று இரவு 9 மணியளவில் உலகிற்கு காண்பிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ பதிவில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காட்ட (ஏப்ரல்5) இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைக்கும்படியும், 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல் விளக்குகள் மற்றும் செல்போன் லைட், டார்ச்சுடன் தங்கள் கதவுகளிலோ ஜன்னல்களிலோ நிற்குமாறு கேட்டுக் கொண்டார். மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஒரு ஸ்டேடியத்தின் சக்தி அங்கிருக்கும் ரசிகர்களிடையே நிறைந்துள்ளது. அதேபோல் இந்தியாவின் நம்பிக்கை நம் நாட்டு மக்களிடையே இருக்கிறது. அதனை இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு உலகிற்கு காண்பிப்போம்.
The power of the stadium is in its fans.
The spirit of India is in its people.Tonight 9pm for 9min
Let’s show the world, we stand as ONE.
Let’s show our Health Warriors,
We stand behind them.
Team India – IGNITED.@narendramodi @PMOIndia— Virat Kohli (@imVkohli) April 5, 2020