நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு இரண்டு காவலர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , சிவகங்கையை சேர்ந்த 2ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதல் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
இதனைதொடர்ந்து நேற்று ஜெயபால் மற்றும் மாணிக்கம் ஆகிய 2 காவலர்களும் இருசக்கர வாகனத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறும் மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளம் அருகே வைத்து போது எதிர்பாரத விதமாக இரண்டு சக்கர வாகனத்தின் குறுக்கே ஒரு நாய் வந்ததால் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.