Categories
தேசிய செய்திகள்

காதல் தம்பதிகளை பிரித்த போலீசார்…. சேர்த்து வைத்த நீதிமன்றம்…!!

காதல் தம்பதிகளை போலீசார் பிரித்த நிலையில் நீதிமன்றம் அவர்களை சேர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்னை காதலித்து வந்துளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அலைக்கு பதிவு செய்து, இளம்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கணவரிடமிருந்து பிரித்து அவரை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த வாலிபர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போது, அந்த பெண் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் பள்ளிச்சான்றிதழின்படி அவருடைய திருமண அரைத்து நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் தன்னுடைய கணவருடன் வாழ முழு உரிமை இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளிதததோடு, இருவரும் வீடு செல்லும் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |