திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட கிடங்கல் 2 அண்ணா தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ராஜேஷ் (வயது 29), விஜயகுமார் என்பவரது மகன் அப்பு என்கிற ஆகாஷ் (வயது 19), அதே பகுதி ராஜன் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் அஜய் ராஜ் (வயது 19) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.