கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்… சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும், அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும், அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும், காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்பு, அன்று 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்த நேரத்தில், அதிலிருந்து ஒரு 200 மீட்டர் தூரத்தில் நம்முடைய காவல் துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அந்த கோவிலில் மூன்றரை மணி அளவில் தான் வந்து செக் பண்ணிட்டு போயிருக்காங்க.
4:00 மணிக்கு இந்த சம்பவம் நடந்த உடனே பக்கத்தில் இருந்த காவல்துறை உடனடியாக வந்து பார்த்து, தீயணைப்புதுறைக்கு தகவல் சொல்லி மேற்கொண்டு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படாதவாறு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விசாரணையின் போது… இதுவரை செய்துள்ள புலன் விசாரணை அடிப்படையில் காவல் அதிகாரிகள் அருகில் இருந்ததால் இந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கும் என்று தகவலும் தெரிய வருகிறது.
அதேபோல இந்த சம்பவம் நடந்ததன் தொடர்ச்சியாக எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதவாறு நகரத்தில் பல்வேறு இடங்களிலும் பீட்ஸ் மற்றும் பெட்ரோல் போட்டு, வாகன சோதனை செய்து தீபாவளியில் இலட்சக்கணக்கான மக்கள் கோவை மாநகருக்கு முக்கியமாக அருகில் உள்ள ஒப்பான காரன் ஸ்ட்ரீட் இந்த பகுதிகளில் எல்லாம் அதே நாள் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றார்கள். எந்தவித ஒரு அசம்பாவிதமும் இல்லை. ஆக சம்பவம் நடந்த உடன் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்து, உரிய சட்ட பிரிவுகள் மாற்றம் செய்து தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருகின்றது.