Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நஞ்சில்லா உணவு” 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்….. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நெல்லை விவசாயி…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

நெல்லை  மாவட்டம்  வள்ளியூர் பகுதியை  அடுத்த இளைய நயினார் குப்பத்தை சேர்ந்தவர்  சுந்தரம். விவசாய தொழில் செய்து வரும் இவர்,  தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறார்.

இந்த பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளையும், தாவரங்களையும்  போட்டு இயற்கையான உரம் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். நஞ்சில்லா உணவு மட்டுமே தனது குறிக்கோள் என்று கூறும் சுந்தரம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விளக்குகிறார். மேலும் உழவர் மன்றம் அமைத்து கூட்டம் நடத்துவதோடு வேளாண்துறை சார்பில் நடத்தப்படும் கூட்டங்களிலும் பங்கேற்பதாக அவர்  தெரிவித்தார்.

Categories

Tech |