உயிரிழந்த ஆயுதப் படை வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், திட்டுப்பரை என்ற இடத்தில் சென்ற ஜூன் 29 ஆம் தேதி அன்று சோதனைச்சாவடி நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து நிற்காமல் சென்றதால் அந்த இடத்தில் பணியில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை வீரர் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்ற சம்பவத்தில் 23 வயது காவலர் பிரபு உயிரிழந்துவிட்டார். அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த இழப்பீடு நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.