கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
மக்கள் நலனை கருத்தில் கொண்டு:
தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது. எல்லாவிதமான சூழல்களை நாம் எதிர் கொண்டு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகின்றோம். தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மருத்துவ கல்லுரி மருத்துவமனையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், தாலுகா மருத்துவமனையிலும் தேவையான சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
இரண்டு மடங்கு படுக்கை வசதி:
சென்னையில் திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி போன்ற மருத்துவமனைகளில் நோயாளிகளை நல்ல சிகிச்சை கொடுக்கின்றோம். கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை அறந்தாங்கியில் சிகிச்சைக்கான வசதிகள் செய்துள்ளோம்.தமிழகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய படுக்கை வசதிகளை தற்போது இரு மடங்காக உயர்த்தியுள்ளோம்.
புதுக்கோட்டை எப்படி ?
புதுக்கோட்டை பார்த்தீர்கள் என்றால், ஏற்கனவே 250 இல் தொடங்கி இப்போது மாவட்டம் முழுக்க சேர்த்து 1,200 படுக்கைகளுக்கான வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். இங்கே பாசிட்டிவ் நோயாளிகள் இதுவரைக்கும் 51 பேர், இதுல 35 பேரை குணப் படுத்தி இருக்கிறார்கள். சென்னையிலும் படுக்கை வசதிகளை தயார்படுத்தியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளும் தங்களுடைய சேவைகளை அளிப்பதற்கு முன் வந்துள்ளார்கள்.
எல்லாம் தயார் நிலையில்:
தமிழ்நாடு முழுக்க சாதாரண இருமல், காய்ச்சல் என்று வந்தாலும், மூச்சுத்திணறலோடு வந்தாலும் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் காய்ச்சலுக்கான OP எடுக்கும் இடத்தில் ஸ்டெச்சர், வீல் சேர், ஆக்ஸிஜன், பல்ஸ் மீட்டர் எல்லாமே தயார் நிலையில் வைத்துள்ளோம். நோயாளி வந்தவுடன் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனே ஆக்சிஜன் கொடுக்கும் எல்லா பணிகளையும் நான் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றேன் (MAY HELP YOU) என்று போட்டு மருத்துவ பணியாளர் ஒருவர் வரக்கூடிய நோயாளிகளை எதிர் நோக்கிக் கொண்டே காத்துகொண்டு இருக்கக் கூடிய நிலையை தமிழ்நாடு முழுவதும் உறுதிப்படுத்தி படுத்தியுள்ளோம்.