குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 15, 2019 முதல் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியும் கலந்து கொண்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது தான் அந்த புகைப்படம் 2016-ம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி எடுக்கப்பட்டது என உண்மை தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்துடன் வெளியான செய்தி தொகுப்பில், “பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்” என்றும் தலைப்பு போடப்பட்டிருந்தது.

தற்போது பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெள்ள தெளிவாகிவிட்டது. இதுபோன்று அடிக்கடி போலி செய்திகள் இணையத்தில் வலம் வந்து அனைவர்களையும் முட்டாளாக்கிவிடும். அதனால் போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களை சரியாக ஆராயாமல் அவற்றை தயவு செய்து பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் விபரீதங்களும், உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.