லண்டனில் நபர் ஒருவர் லாட்டரி பரிசில் கிடைத்த 20 கோடி ரூபாயை தவறவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனின் Lewisham-ல் உள்ள கடை ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவரால் VSHS38986 என்ற எண்ணில் வாங்கப்பட்ட லாட்டரியில் 1,000,000 பவுண்ட் ( இலங்கை மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு மேல் ) பரிசு தொகை விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஆறு மாதம் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அந்த நபர் பரிசுத்தொகையை வாங்கவில்லை. இதனால் யூரோ மில்லியன் லாட்டரி டிக்கெட்டை அதாவது ஜாக்பாட் லாட்டரிக்கான பரிசுத்தொகையை கடந்த புதன்கிழமை அன்று மீண்டும் சரி பார்த்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டது.
மேலும் இன்று நள்ளிரவு அந்த லாட்டரி டிக்கெட்டுக்கான காலக்கெடு முடிவடைவதாகவும் ஒரு மில்லியன் பவுண்டுக்கான பரிசு தொகையை அந்த நபர் இழந்து விட்டார் எனவும் செய்தி வெளியானது. அதனை கண்ட இணையவாசிகள் அந்த நபர் தேடி வந்த அதிர்ஷ்டத்தை இழந்து விட்டாரே அவரை முதலில் கண்டுபிடியுங்கள் என பதிவு செய்து வருகின்றனர்.