அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் சுயநினைவை இழந்த நபர் ஒருவர் பொத்தென தரையில் விழுந்த பரபரப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அலெக்ஸ் கோரியாஸ் என்ற இளைஞர் தனது மூன்று நாய்களுடன் டெக்ஸாஸில் உள்ள ஸ்டூப்னர் ஏர்லைன் கால்நடை மருத்துவமனைக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் மின்னல் தாக்கியதில் கோரியாஸின் கால் உரைகளும், காலணிகளும் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சுய நினைவை இழந்து இதய துடிப்பு நின்ற நிலையில் கோரியாஸ் தரையில் விழுந்துள்ளார்.
மேலும் அவருடைய காலுக்கு அருகில் மின்னல் தரையில் படுவதனையும் கண்காணிப்பு கேமரா காட்டியுள்ளது. இதையடுத்து கோரியாஸ் தரையில் விழுந்த சில நிமிடங்களில் நபர் ஒருவர் அவரை நோக்கி ஓடுவதையும், மருத்துவ உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டதனையும் வீடியோவில் காண முடிகிறது. பின்னர் மருத்துவமனையில் கோரியாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடைய நாய்கள் காவல்துறையினரால் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.