Categories
தேசிய செய்திகள்

பாம்பைத் தேடிப் தேடி பிடிக்கும் நபர் – 120ஆவது முறையும் வெற்றியே…!!

எர்ணாகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி ‘கிங் கோப்ரா’ பாம்பை யாருடைய உதவியுமின்றி பிடித்து அசத்திய நபர் குறித்து தெரிந்து கொள்வோம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ். இவரின் வீடு அருகில் உள்ள ஓடையில் பாம்பு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஸ்நேக் கேட்சர் மார்டின் பாம்பைப் பிடிக்க வருகைத் தந்தார். ஆனால், பாம்பு இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்தார். பின்னர், 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு 12 அடி நீளமுள்ள கறுப்பு நிற ‘கிங் கோப்ரா’ இனத்தைச் சேர்ந்த பாம்பை மார்டின் பிடித்தார்.

இதன்மூலம் ஸ்நேக் கேட்சர் மார்டின் 120ஆவது முறையாக வெற்றிகரமாகப் பாம்பைப் பிடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இப்பகுதியில் ஐந்தாவது முறையாக கிங் கோப்ரா பாம்பைப் பிடிக்கின்றேன். வீடு மற்றும் வளாகங்களை மக்கள் கவனிக்கின்ற மாதிரி சுற்றுப்புறங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை, பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

Categories

Tech |