ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களோடு நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவர் சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மாலை முதல் தீவிரமாக தேடி வந்த நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இரண்டாவது நாளாக பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்களும் இணைந்து படகுகள் மூலமாக மாயமான இளைஞரை இன்றும் தீவிரமாக தேடி வருகின்றனர். குளித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயமான சம்பவம் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.