திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண்களும், ஆண்களும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறோம். பெண்களுக்கு ஓட்டே கிடையாது ஒரு காலத்துல… இன்று வரை அவர் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது, அதை தான் திரும்ப கொண்டு வரணும்னு சொல்லுறான்.
அதை புரிந்துகொள்ளாமல் இன்றைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார்கள் என்று சொன்னால், இந்த தருணத்தில் தான், நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலக்கிய அணி சார்பாக இந்த விழா நடைபெறக்கூடிய காரணத்தினால், இலக்கிய அணி நம் இயக்கத்தினுடைய வரலாற்றை சொல்ல வேண்டும். இலக்கியங்கள் சொல்ல வேண்டும். தமிழன் என்றால் யார்?
இந்த இனம் எப்படி இருந்தது? ஒரு காலத்தில் நம்மை எல்லாம் எப்படி ஒடுக்கி வைத்திருந்தார்கள்? சூத்திரன் என்றால் என்ன? இதை எடுத்து சொன்னா இன்னைக்கு எல்லாம் உடனே போராட்டம் நடத்துறான். ராசா என்ன பேசினார் ? என்ன குற்றம் ? மிகப்பெரிய உலக மகா தவறு செய்து விட்டதை போல இன்று அவரை எதிர்த்து ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டமே செய்கிறது. அதற்கு என்ன காரணம்னா ? நமக்குள்ள இருக்கின்ற மக்களுக்கு சொரணை போயிருச்சு என தெரிவித்தார்.