சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர் கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் என்ன செய்கிறோம். எங்கெல்லாம் செல்கிறோம் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மத்திய அரசு இனி தொடர்ந்து கண்காணிக்கும்.
இவையாவும் குழந்தைஆபாசப்படம், போலி செய்திகள், வன்முறை, சமூக நலத்திற்கு கேடான விஷயங்கள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பதற்காகவே இந்த செயல்முறை கொண்டு வரப்படுவதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் இதை தனிமனித உரிமைகளை மீறும் படி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.