தமிழ் கட்சிக்கும், இலங்கை அதிபருக்கும் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று முதல் முறையாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி. சுமந்திரன் இந்த பேச்சுவார்த்தை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இனி எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி. இந்த சந்திப்பு விரைவில் நடந்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் மாகாண கவுன்சில் ஆட்சிமுறை கடந்த 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி 13ஏ அரசியல் சட்ட திருத்தத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அதிபர் இந்த மாகாண கவுன்சில்களை கலைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டணியின் 13 ஏ திருத்தம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த 13 ஏ திருத்தம் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதற்காக நீடிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. இது சம்பந்தமாக தான் அதிபர்-தமிழ் கட்சி இடையே பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.