Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மிரட்டல் விடுத்த கிரசரின் உரிமையாளர்… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கிரசரில் உரிமையாளர் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பெறமாவூரில் கனகசபை என்பவர் வசித்து வந்துள்ளனர். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்நிலையில் கனக சபை மற்றும் அவரது மகன் மணிவேல்(20) இருவரும் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் உள்ள கிரசரில் வேலைபார்த்து வந்துள்ளனர். இதனை ஸ்ரீபாலன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவேல் ஸ்ரீபாலன் கிரசரில் வேலையை விட்டுவிட்டு வேட்டாம்பட்டியில் உள்ள வேறு ஒரு கிரசருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீபாலன் கனகசபையிடம் கேட்டு அவரை மிரட்டியுள்ளார். இதனால் கனகசபை மிகவும் மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அதிகாலையில் கனகசபை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணாததால் மனைவி மற்றும் மகன் மணிவேல் கனகசபையை தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கனகசபை மேரமாவூரில் உள்ள குட்டை பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று கனகசபையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

மேலும் கனகசபையை தற்கொலைக்கு தூண்டிய ஸ்ரீபாலனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கனகசபையின் உறவினர்கள் அக்கியம்பட்டி-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரத்திற்கு பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து சேர்ந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கிரசரின் உரிமையாளர் ஸ்ரீபாலன் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |